ஆண் பெண் மலட்டு தன்மையை துரத்தி அடிக்கும் கல்யாண முருங்கை!! இதில் சூப் செய்து குடித்து பலன் பெறுங்கள்!!

Photo of author

By Divya

ஆண் பெண் மலட்டு தன்மையை துரத்தி அடிக்கும் கல்யாண முருங்கை!! இதில் சூப் செய்து குடித்து பலன் பெறுங்கள்!!

Divya

தற்பொழுது ஆண் மற்றும் பெண்களிடையே அதிகரித்து வரும் மலட்டு தன்மை பிரச்சனையை கல்யாண முருங்கை இலையை கொண்டு சரி செய்யலாம்.

இந்த இலை மலட்டு தன்மை,கருப்பை சார்ந்த பிரச்சனை,விந்தணு குறைபாட்டை சரி செய்யும் அருமருந்தாக திகழ்கிறது.கிராமப்புறங்களில் வேலி ஓரங்களில் வளர்ந்திருக்கும் இந்த செடியின் இலை,பூக்கள்,விதை மற்றும் பட்டை என்று அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக உள்ளது.

மலட்டு தன்மையை போக்கும் கல்யாண முருங்கை இலை சூப் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)கல்யாண முருங்கை இலை – 10
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)கரு மிளகு – கால் தேக்கரண்டி
4)பூண்டு பற்கள் – நான்கு
5)தக்காளி – ஒன்று
6)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
7)சின்ன வெங்காயம் – இரண்டு
8)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் 10 பிஞ்சு கல்யாண முருங்கை இலையை பறித்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து வெள்ளைப் பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது பாத்திரம் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள கல்யாண முருங்கை இலையை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அடுத்து இடித்த சீரக கலவையை அதில் போட்டு கலந்துவிட வேண்டும்.பின்னர் இடித்த பூண்டு கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு தூள் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த கல்யாண முருங்கை இலை சூப்பை இளஞ்சூட்டில் பருகி வந்தால் ஆண்,பெண் மலட்டு தன்மை நீங்கும்.