மது குடிக்க அழைத்து கொலை செய்த குழுவை காட்டி கொடுத்த கிணறு! போலீசாரின் அதிரடி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் தாலுகாவில், படப்பை ஊராட்சியில், உள்ள முருகாத்தம்மன் பேட்டையில், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு. 34 வயதான இவர் படப்பை அருகே தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி வேலைக்கு சென்ற கணவரை இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
மேலும் தன கணவர் கிடைக்காததால், ரேணுகா தனது கணவர் மாயமானது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் படப்பை அடுத்த சாலமங்கலம் ஆத்தூர் அருகே காவல் கலனி என்ற இடத்தில் கருவேல மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியில் உள்ள பாழடைந்த ஒரு கிணற்றில், இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து கிணற்றிலிருந்து ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாயமான ராமு தான் இவர் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணியைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் முதலில் முன்னுக்குப்பின் முரணாக கூறிய நிலையில், அதன் பிறகு தனக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளதாகவும், மணி எனது மனைவி மகாலட்சுமி 5 ஆண்டுகளாக அந்த ராமுவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்ததாகவும், இது எனக்கு தெரியவரவே ராமுவையும், மனைவியையும் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் தொடர்பு நீடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணி, ராமுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். கடந்த 4ஆம் தேதி போன் மூலம் ராமுவை மதுகுடிக்க அழைத்துள்ளார். அங்கு வந்த ராமு, மணி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஒன்றாக மது குடித்தனர். மது போதையில் மீண்டும் கள்ளக்காதல் விஷயமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
மோதல் முற்றி யதை அடுத்து ராமுவின் கழுத்தை கத்தியால் வெட்டி கொன்று சேலையால் அவரது உடலில் கல்லை கட்டி காவல் கழனியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவித்தனர். போலீசார் மணியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக அவரது நண்பர்களான தினேஷ், வினோத், பிரபாகரன், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த பூவேந்திரன், நரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆகாஷ், ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த பரத்குமார், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் ஆகியோரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.