கணவன் கண் முன்னே தலை நசுங்கி உயிரிழந்த மனைவி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் ஊஞ்சாலூர் அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பைச் சேர்ந்தவர் பெரியசாமி.இவருடைய மனைவி கண்ணம்மாள் . இவர்கள் இருவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெள்ளோட்டம் பரப்பில் இருந்து கரூரில் உள்ள அவர்களின் மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் கொடுமுடியை அடுத்த வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அதே பகுதியில் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த டிப்பர் லாரியானது பெரியசாமி மற்றும் கண்ணம்மாள் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. அதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர்.
அந்த விபத்தில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் கண்ணம்மாள் மீது லாரியின் டயர் ஏறி இறங்கியது அதில் தலை நசுங்கி கண்ணம்மாள் துடிதுடித்து கணவன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.அப்போது லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.மேலும் அக்கம்பக்கத்தினர் கொடுமுடி போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்ணம்மாள் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பெரியசாமியை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.