உடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி!!! தன்னை தானே மார்பில் குத்திக் கொண்டு உயிரிழந்த கணவன்!!!

Photo of author

By Sakthi

உடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி!!! தன்னை தானே மார்பில் குத்திக் கொண்டு உயிரிழந்த கணவன்!!!

கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து சென்ற மனைவியிடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கணவன் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியால் ஆத்திரம் அடைந்த கணவன் தன்னை தானே மார்பில் கத்தியால் குத்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழுவை பகுதியில் மல்லிகிருஷ்ணன் அவர்கள் வசித்து வருகிறார். மல்லிகிருஷ்ணன் அவர்களுக்கும் உத்தமபாளையத்தில் வசிக்கும் ஈஸ்வரி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் மல்லிகிருஷ்ணன் ஈஸ்வரி தம்பதியினர் சின்னமனூரில் உள்ள காந்திநகர் காலனி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மல்லிகிருஷ்ணன் அவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

மது குடிக்கும் பழக்கத்தால் அடிக்கடி ஈஸ்வரிக்கும் மல்லிகிருஷ்ணன் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு பிரச்சனையில் முடிய மனைவி ஈஸ்வரி கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து மல்லிகிருஷ்ணன் அவர்கள் ஈஸ்வரி வீட்டுக்கு சென்று ஈஸ்வரியிடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு மல்லிகிருஷ்ணன் கேட்டுள்ளார். அதற்கு ஈஸ்வரி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மல்லிகிருஷ்ணன் கத்தியால் மார்பில் குத்திக் கொண்டு மயக்கம் அடைந்தார்.

இதையடுத்து கீழே விழுந்த மல்லிகிருஷ்ணன் அவர்களை உறவினர்கள் எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அச்சம் அடைந்த உறவினர்கள் அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு மல்லிகிருஷ்ணன் அவர்களை பிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலே இறந்துவிட்டார் என்று கூறினர். இதையடுத்து உத்தமபாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.