போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்!

Photo of author

By Parthipan K

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்!

கோவை மாவட்டதில்   காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் வீரம்மாள் (47). இவர் முதலில் கோவையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மேலும் இப்போது நிலகிரி மாவட்டம் புதுமந்து காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சரவணன் (47) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தனர். இதனையடுத்து நேற்று காலை  வீரம்மாளுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிறகு அது கைகலப்பாக மாறியது. அப்போது வீரம்மாள் ஆத்திரமடைந்து தனது கணவரை கட்டையால் தாக்கினார். அவரது கணவரும் வீரம்மாள்யை தாக்கினார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வீரம்மாள்  சிகிச்சையின் பொழுதே கோவை பந்தய சாலை போலீசாரிடம் புகார் அளித்தார். அதனையடுத்து அவரது கணவரும் வீரம்மாள் மீது புகார் அளித்தார்.காவலர் மீதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த கணவர் என கோவையில் அரங்கேறிய பரபரப்பு.