ஏண்டா! கண்டவளோட உனக்கு லாட்ஜ் கேட்குதா? கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்த மனைவி!

Photo of author

By Kowsalya

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் லாட்ஜில் தங்கியிருந்த கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்து போலீசிடம் ஒப்படைத்த கான்ஸ்டபிளின் மனைவி.

தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்திரி கொத்தகூடம் என்ற மாவட்டத்தில் பத்ராச்சலம் என்ற பகுதியில் ஆயுதப்படை காவலராக பணியில் இருப்பவர் சுபாஷ்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சுபாஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.இதனால் சுபாஷ் மற்றும் அவரது கள்ளக்காதலி தனியார் லாட்ஜ் ஒன்றில் உல்லாசமாக இருந்த பொழுது அந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சுபாஷின் மனைவி அந்த லாட்ஜிற்க்கு சென்று இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து, செருப்பு மற்றும்

கட்டைகளாலேயே அடித்துக்கொண்டே சாலையில் கூடிசென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவலர் சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றன. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.