டிப்ளமோ அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

0
69

அரியர் தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், “அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசத்தை நீட்டிக்க கோரி” மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரின் மனு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மாணவர் ஏற்கனவே டிப்ளமோ பிரிவில் தேர்வு எழுதி, தேர்வின் மறுமதிப்பீடு முடிவில்  தோல்வி பெற்றிருந்தார், மீண்டும் அரியர் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

அப்போது அவர் கல்லூரிக்கு சென்றிருந்த போது, ‘அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் முடிவடைந்து விட்டதாக அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டது’. இதையடுத்து அந்த மாணவர் ‘டிப்ளமோ ஆரியர் தேர்வுக்கான, கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசத்தை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்’ செய்திருந்தார்.

இந்த மாணவர் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை பரிசீலனை செய்த பிறகு அனைத்து மாணவர்களின்  நலன்களையும் கருத்தில் கொண்டு நீதிபதி அவர்கள் அரியர் தேர்வு எழுதுவதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு கடைசி வாய்ப்பாக ஒரு மாத கால அவகாசம் வழங்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

author avatar
Parthipan K