அடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி!

Photo of author

By Hasini

அடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி!

Hasini

அடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி!

குடித்துவிட்டு வந்து தினமும் அடித்து கொடுமை செய்யும் கணவனை, மனைவியே ஆடு கட்டும் கயிற்றின் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியில், அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி. 31 வயதான இவருக்கு, மனைவி அருணா இருபத்தி ஆறு வயதான நபர் இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும் 3 வயதில் ஒரு குழந்தையும் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், விடிந்து பார்க்கும்போது கணவர் இறந்து விட்டதாக அவர் போலீசில் தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைத்திலும் தகவல் தெரிவித்தார் எனவே ரகுபதியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது வந்த முடிவில் அவரது கழுத்தில் காயங்கள் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளனர். இது குறித்து அருணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளும் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அதன் காரணமாக அருணாவை மீண்டும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது அவரே உண்மைகளை முன்வந்து சொல்லிவிட்டார்.

மேலும் அப்போது அருணா தன் கணவர் எப்போதும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்தி வருகிறார். எனக்கு தாய் மற்றும் தந்தையோ, உறவினர்களோ இல்லை. ரகுபதியின் பெற்றோரிடம் சொல்லியும் அவர்கள் எதுவுமே கண்டுகொள்ளவே இல்லை. இதன் காரணமாக நான் என்ன செய்வதென்று தெரியாமல் அவரை ஆடு கட்டும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டேன் என்று கூறினார்.

மேலும் அவர் அப்பாவியாக அவரது கொடுமை தாங்க முடியல சார். அதனால் தான் அப்படி செய்தேன் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அருணாவிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவியை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.