சொத்தை எழுதி ககொடுக்க மறுத்த மனைவி! இரண்டாவது திருமணம் செய்த கணவர்!!

Photo of author

By Sakthi

சொத்தை எழுதி ககொடுக்க மறுத்த மனைவி! இரண்டாவது திருமணம் செய்த கணவர்!!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில்  கணவருக்கு சொத்தை எழுதித்தர மனைவி மறுத்ததால் கணவர் இளம்பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் கொடுங்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வருபவர் 36 வயது உடைய விஜின்குமார். இவருக்கு திருமணம் ஆகி 34 வயதாகிய இவரது மனைவி சந்தியா கருங்கல் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

 

கணவர் விஜின்குமார் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சந்தியா அவர்கள் பாலக்கோடு பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி விஜின்குமார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் 18 வயதுள்ள இளம்பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சந்தியா அவர்களுக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்துள்ளது. பின்னர் இது பற்றி அறிந்த விஜின்குமார் மனைவி சந்தியா அவர்கள் இரண்டாவது திருமணம் நடந்தது பற்றி கேட்டுள்ளார்.

 

அதற்கு பதில் அளித்த விஜின் குமார் “உன் தந்தையிடம் 10 லட்சம் பணம் வாங்கித் தரும்படி கேட்டேன். அல்லது சொத்தை என் பெயரில் எழுதி வைக்கும்படி கேட்டேன். நீ கேட்காததால் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

 

இதைப் பற்றி நான் காவல்துறையினரிடம் புகார் அளிப்பேன் என்று கூறியதற்கு கணவன் விஜின்குமார் மனைவி சந்தியாவை ஆபாசமாக திட்டி கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பி ஓடிய மனைவி சந்தியா ஆன்லைன் மூலமாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

விஜின் குமார் மனைவி சந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலிஸார் விஜின்குமார், விஜின்குமாருக்கு திருமணம் நடத்தி வைத்த ஈத்தவிளையை சேர்ந்த சபை போதகர் பிரின்ஸ், கொடுங்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ், களியலை சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.