வங்கதேசம் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் அணி! இந்திய மகளிர் அணியை அறிவித்த பிசிசிஐ!!

0
62

வங்கதேசம் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் அணி! இந்திய மகளிர் அணியை அறிவித்த பிசிசிஐ!!

 

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பிசிசிஐ வங்கதேசத்தில் விளையாடும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான மகளிர் அணியை அறிவித்துள்ளது.

 

வங்கதேசத்துக்கு செல்லும் இந்திய மகளிர் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

 

மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் என மொத்தம் ஆறு போட்டிகளும் மீர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா சர்வதேச மைதானத்தில் நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

 

இந்திய மகளிர் அணியும்அ வங்கதேச மகளிர் அணியும் மோதும் டி20 தொடர் ஜூலை 9ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இந்த தொடர் ஜூலை மாதம் 22ம் தேதி முடிவடையும் என்று தகவல்  கிடைத்துள்ளது.

 

இதையடுத்து இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வங்கதேசம் செல்லும் இந்திய மகளிர் அணியை அறிவித்துள்ளது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என்று இரண்டு வகை போட்டிகளுக்கும் வங்கதேசம் செல்லும் இந்திய மகளிர் அணிக்கு ஹர்மன் பிரீட் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருத்தி மந்தனா அவர்கள் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அனுபவம் மிகுந்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ரேனுகா சிங், பேட்டர் ரிச்சா கோஷ் ஆகியோர் வங்கதேசம் செல்லும்  அணியில் சேர்க்கப்படவில்லை. இது இந்திய.மகளிர் அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகின்றது.

 

வங்ததேசம் சென்று டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி…

 

ஹர்மன்பிரீட் கவுர்(கேப்டன்), ஸ்மிருத்தி மந்தனா(துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா, தேவிகா வைத்யா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், உமா செத்ரி, மேக்னா சிங், எஸ்.மேகனா, பூஜா வஸ்த்ரகர், அஞ்சலி சர்வானி, ராஷி கனோஜியா, மோனிகா பட்டேல், அனுஷா பாரெட்டி, மின்னு மணி

 

வங்கதேசம் சென்று ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி…

 

ஹர்மன்பிரீட் கவுர்(கேப்டன்), ஸ்மிருத்தி மந்தனா(துணைக் கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், யஸ்திகா பாட்டியா, ஹர்லீன் டியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், பிரியா புணியா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி ஷர்வாணி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனீஷா பாரெட்டி, ஸ்னேஹ் ரானா