வேலை கேட்டு மேனேஜரை சந்திக்க சென்ற காட்டு ராஜா! வைரலாகும் வீடியோ! 

Photo of author

By Amutha

வேலை கேட்டு மேனேஜரை சந்திக்க சென்ற காட்டு ராஜா! வைரலாகும் வீடியோ! 

தனியார் அலுவலகத்தில் வேலை நடக்கும் நேரத்தில் சிங்கம் ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜுலாவில் தனியார்  நிறுவன அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கம் திடீரென ஒரு சிங்கம் அலுவலகத்திற்குள் நுழைந்தது.  இதனை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  மெதுவாக வந்த அந்த சிங்கம் ஹாயாக அலுவலகத்தில் உள்ள ஓவ்வொரு அறைக்கும் சென்று உலாவி விட்டு வந்தது. அதன் பின்னர் தானாகவே சிங்கம் எதுவும் செய்யாமல் அலுவலகத்தை விட்டு வெளியேறியது.  

இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து காட்டில் உணவில்லாத காரணத்தினால் நாட்டில் உள்ள அலுவலகத்தில்  “ஒருவேளை வேலைக்கேட்டு மேனேஜரை தேடி காட்டு ராஜா வந்திருக்குமோ” என நகைச்சுவையான பதிவுகளை இட்டு வருகின்றனர்.

அலுவலகத்தில் சிங்கம் நுழைந்த காட்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள கிர்க்காடுகள் சிங்கம் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.