வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் உள்ளிருந்த பெண்!! மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள்!!
தற்போது பல வடமாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனையடுத்து ஹரியனாவில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது பஞ்ச்குலா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் காக்கர் ஆற்றில் அபாயகரமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .
இந்நிலையில் கரையோரமாக கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஏற்பட்டதால் கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது . அந்த காரின் உள்ளே ஒரு பெண் இருந்துள்ளார் . அதிக வெள்ளத்தால் அவரும் அந்த காருடன் அடித்து செல்லப்பட்டு இருக்கிறார். இதனை பார்த்த அந்த ஊர் பொது மக்கள் உடனடியாக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார்கள்.
மேலும் அவர்கள் வருவதற்கு முன்பே கார் வெள்ளத்தில் நடுவே சிக்கிக்கொண்டது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு இருந்த அந்த பெண்ணை கயிறு கட்டி உள்ளூர் இளைஞர்கள் மீட்க முடிவு செய்தனர்.
அதன் பின் ஒரு கம்பத்தில் கயிறு கட்டி அதனை பிடித்து கொண்டே மெதுவாக கார் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
அந்த பெண்ணை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தபின் பெண்ணுக்கு சிக்கிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த மீட்பு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறது.