சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்!
சின்னசேலம் அருகே அம்மையகரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராணி. 45 வயதான இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவரது பெயர் மஞ்சுளா. 25 வயதான மஞ்சுளா கடந்த இரண்டு ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் தனது வேலைக்கு என வீட்டிலிருந்து பேருந்தின் மூலம் பயணம் மேற்கொள்கிறார்.
இவர் வீட்டில் இருந்து அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டிய தூரம் கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் இருப்பதன் காரணமாக மஞ்சுளா பெருத்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். மிக அதிக நேரம் பயணம் சென்று வருவதன் காரணமாக அவருக்கு ஓய்வு நேரம் என்பதே ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தான் கிடைத்துள்ளது. இதனால் அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளார்.
அதன் காரணமாக அவர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். இருப்பினும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அவர் கூறிய கோரிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர் போல. இதனாலேயே கடந்த சில நாட்களாகவே மஞ்சுளா மிகவும் மனம் சோர்ந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அவர்கள் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு செவிலியர் இவ்வாறு செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.