பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! போக்குவரத்துத்துறை கடுமையான எச்சரிக்கை!

0
72

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று அதிகமாக இருந்து வந்ததன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகள் ஆரவாரமில்லாமல் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், இந்த வருடம் மெல்ல,மெல்ல நோய் தொற்று பரவல் குறைந்து வருகின்ற சூழ்நிலையில், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக, தீபாவளி பண்டிகை மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தது.

இதனால் இந்த வருடம் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் என தெரிகிறது ஆகவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதாவது போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்ததாவது தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது தொடர்பாக முறையான புகார்கள் வந்தால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்.

பேருந்து கட்டணம் முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது எனவும், அவர் தெரிவித்திருக்கிறார் தொடர்ந்து உரையாற்றிய அவர் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தற்சமயம் சென்னை போக்குவரத்து பணிமனைகளில் தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

பேருந்துகளில் சுமார் 2900 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார், பேருந்துகளில் தவறுகள் நடைபெறாத வார்டு முதலமைச்சரின் உத்தரவின் பேரின் கண்காணிக்கப்படும் எனவும், இதனை அடுத்து தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு தீபாவளிப் பண்டிகையின்போது பொது மக்களின் தேவைக்கு ஏற்றவாறு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.