இதை செய்வதாக கூறி  1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு!

Photo of author

By Rupa

இதை செய்வதாக கூறி  1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு!

பலருக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கனவு இருந்து வருகிறது.ஆனால் இவர்கள் நேரடி முறையில் பணியை வாங்க விரும்புவதில்லை.பணம் கொடுத்து பணியை பெற நினைக்கின்றனர். அவ்வாறு பலர் மோசடி கும்பலிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.அந்த வகையில் சென்னையில் சேலையுரை சேர்ந்தவர் பூபதி இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.இதே சென்னையில் புழுதிவாக்கத்தில் குடியிருப்பவர் தான் ஸ்டெபி.இவர் துப்பரவு செய்யும் பணியாளர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பேசி வந்துள்ளார்.மேலும் அவர்கள் மீது அக்கறை உள்ள விதமாகவும் காட்டியுள்ளார்.அந்த வகையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்,சுகாதார மேற்பார்வையாளர் ,துப்புரவு பணியாளர் போன்ற பணிகளை வாங்கி தருவதாக கூறி பேசி வந்துள்ளார்.

மேலும் ஸ்டெபி தான் ஒரு வழக்கறிஞர் அதுமட்டுமின்றி எனக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். அத்துடன் வழக்கறிஞர் உடை பணிந்த புகைப்படத்தையும் இவர்களிடம் காட்டியுள்ளார்.இவர்களும் அதனை நம்பி செபியிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.ஆனால் ஸ்டெப்பிங் பூபதிக்கு வேலை வாங்கித் தராமல் தான் தங்கி இருந்த வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.அதனால் பூபதி வீட்டார் ஸ்டெபி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பெயரில் வழக்கறிஞர் என்று கூறி பணத்தை பெற்று கொண்டு தப்பிச்சென்ற வெற்றியைத் தேடி வந்துள்ளனர்.

ஸ்டெபி பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து அவரை போலீசார் ட்ரேஸ் செய்துள்ளனர்.அதன்பிறகு ஸ்டெபி திண்டிவனத்தில் இருப்பதாக தகவல் வெளிவந்தது.இதனையடுத்து போலீசார் அங்கு சென்று ஸ்டெபி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.மேலும் விசாரணையில் ஸ்டெபி இதுவரை ஒரு கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது 35 பேர் புகார் அளித்துள்ளனர்.அதுமட்டுமின்றி அவர் வழக்கறிஞர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மக்கள் அனைவரும் இது போன்ற போலியான அவர்களிடம் தங்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்கின்றனர். அதனால் நேரடி முறையிலேயே அரசு பணி கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்.