தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த ஆசைக்காக செய்த கொடூர செயல்!! 

0
144
The woman who did what no mother dares to do to her daughters!! 2nd husband's cruel act for that desire!!
The woman who did what no mother dares to do to her daughters!! 2nd husband's cruel act for that desire!!

தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த  ஆசைக்காக செய்த கொடூர செயல்!! 

தனது சுயநலத்திற்காக சந்தோசம் பறிபோய்விடும் என்று தனது இரு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆகியுள்ளார் ஒரு கொடூர மனம் படைத்த தாய்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் மாவட்டம் வட்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் 30 வயதான அந்த இளம்பெண். இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் அவரது கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். கணவர் இறந்ததும் தனிமையில் வாழ்ந்து வந்த அந்த பெண் தனது தாய் மாமன் சதீஷ்குமார் வயது 43 என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக முதல் கணவரின் இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு சதீஷ் உடன் வாழ்ந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் யாரோ ஒருவருக்கு பிறந்த குழந்தைகள் தனது வாரிசாக இருப்பதை விரும்பாத சதீஷ் தனக்கென ஒரு வாரிசு வேண்டும் என அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். எனவே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தான் இரண்டாவது திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ தான் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதால் தனக்கு குழந்தை மீண்டும் பிறக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் சதீஷ் தொடர்ந்து வற்புறுத்தவே முதல் கணவனை சிறிய வயதிலேயே இழந்த அந்த பெண் இரண்டாவது கிடைத்த சந்தோஷ வாழ்க்கையை விட மனமில்லாமல் வேறு பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம் என்றும் அதற்கு பதில் தனது மகள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனால் விசாகபட்டினத்தில் 8ஆம் வகுப்பு படித்து வந்த பெண்ணை சதீஷிடம் ஒப்படைக்கவே அவர் அந்த சிறுமியை கடும் எதிர்ப்பை மீறி காட்டுமிராண்டி தனமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் கர்ப்பமான அந்த சிறுமி விஷயம் வெளியில் தெரிந்தால் அக்கம் பக்கத்தினர் எதாவது பேசுவார்கள் எனக் கருதி கருகலைப்பு செய்யப்பட்டது.

ஆனால் மீண்டும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமாகி ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ஆசை அடங்காத அந்த கொடூரன் தனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என அந்த பெண்ணிடம் நச்சரிக்கவே எப்படியும் 2-வது மகளையும் தம்மிடம் ஒப்படைப்பார் என்ற சதீஸின் கேவல எண்ணம் புரியாத அந்த பெண் 2-வது பெண்ணையும் ஒப்படைத்துள்ளார்.

அந்த குழந்தையையும் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியத்தில் ஆண் குழந்தை இறந்தே பிறந்ததால் அதை கால்வாயில் வீசி உள்ளனர். இதையடுத்து இளம்பெண் மற்றும் சதீஷ் இடையே தகராறு ஏற்பட்டதில் அவர் தனது மகள்களை அவரிடம் விட்டு விட்டு விசாகபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

போலீசார் சதீஷ் மற்றும் சிறுமிகள் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மூத்த மகள் மீண்டும் கர்ப்பமடையவே அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ஏலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சதீஷ் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல் சிறுமிகளின் இந்த நிலைமைக்கு காரணமான அவரது தாயையும் கைது செய்தனர். தனது வாழ்க்கை பறி போய்விடும் என்ற சுயநலத்தினால் இரண்டு பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையை சூனியமாக்கி இருட்டில் தள்ளி விட்டுள்ளார் அந்த கொடூர தாய்.

 

Previous articleமேம்பாலம் அமைப்பதில் புதிய முறை!! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!!
Next articleஆதார் கார்டு பயனாளர்களுக்கு வந்த புதிய அப்டேட்!! இனி Google pay வில் சுலபமாக கணக்கு தொடங்கலாம்!!