இரவில் கோயிலுக்கு சென்ற பெண் திடீர் மரணம் !!

Photo of author

By Parthipan K

இரவில் கோயிலுக்கு சென்ற பெண் திடீர் மரணம் !!

Parthipan K

பவானி பகுதியில் சித்தோடு அருகிலுள்ள பேரேட்டை சேர்ந்த சிவகாமி என்பவர் இரவில் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவானி சித்தோடு பகுதியில் அருகிலுள்ள பேரேட்டை சேர்ந்த சிவகாமி (47) என்பவர் அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளராக ஆட்டையாம்பாளையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சதாசிவம் இருதய நோயாளியாக உள்ளார். இவ்விரு வர்களுக்கும் குழந்தை இல்லாததால் குழந்தை வரம் வேண்டி வீட்டிற்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தினமும் சிவகாமி இரவில் செல்வது வழக்கமாக சென்று வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கணவனுக்கு மாத்திரை கொடுத்து விட்டு கோவிலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து சதாசிவம் எழுந்தவுடன் மனைவி இல்லை என்பதனை அறிந்து, பக்கத்தில் சகோதரி வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து நடைப்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். ஆனால் வழக்கமாக செல்லும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே சென்றபோது சாலையோரத்தில் மனைவி சடலமாக கிடப்பதை பார்த்த சதாசிவம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மனைவி ,வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சதாசிவத்திற்கு தெரியவந்தது. மேலும் இது குறித்த சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.