நகுலை கேவலமான வார்த்தைகளால் கிழிக்கும் பெண்! நகுல் செய்த செயல்!

0
188

பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் போன சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் நகுல். பிரபல நடிகையான தேவயானையின் தம்பியாக இருந்தாலும் அவ்வளவாக வெற்றி படங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

 

இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக நகுல் பங்கேற்று வருகிறார். அதில் நான்கு சீசன் களாக கலந்துகொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஜோடிகளுடன் நடனமாடும் நிகழ்ச்சி. இதை பார்த்து பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை அவதூறாக பேசியுள்ளார். அதற்கு நகுல் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

 

லூசு பயலே, மெண்டல் பயலே என்னடா பண்ணிக்கிட்டு இருக்க பிக்பாஸ் ஜோடிகள்ல…?

மெண்டல் மாதிரி பண்ணிட்டு

இருக்குற, மூஞ்சியும் மொகரையும் செத்தப்பயலே எரிச்சலாக செஞ்சுட்டு இருக்க என்று அவரை திட்டி கமெண்ட் செய்துள்ளார்.

 

அவரது கமெண்ட்டுகளை பார்த்தும் கோவப்படாத நகுல் கூலாக பதில் அளித்துள்ளார். “சந்தோசமா ? இப்போ நல்லா பீல் பண்றீங்களா ? இப்படி பேசினால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை. உன்னை நினைத்து தான் பாவமாக இருக்கிறது. உனக்கு புடிக்கவில்லை என்றால் வேற ஷோவை போய் பாரு. இது மோசமான வளர்ப்பின் அறிகுறி. மேலும் உனக்கு தெரபி தேவைப்படுகிறது. மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற்றுக் கொள் என்று அந்த பெண்ணுக்கு புத்தியில் உரைக்கும் படி கூறியுள்ளார்.

இவரது இந்த செயலை கண்டு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இது உங்களது பெருந்தன்மையை காண்பிக்கின்றது என நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

author avatar
Kowsalya