சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 17வயது சிறுமி திடீரென மாயமானார்.அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அந்த சிறுமியை பல இடங்களில் தேடி சென்றனர்.எங்கு தேடியும் அந்த சிறுமி கிடைக்காததால் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அந்த விசாரணையில் பாரதி நகர் நடுத்தெரு சமுத்திரவேல் மகன் பிரகாஷ்.இவர் நகரசபையில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றார். இவர் மீது சந்தேகம் அடைந்து அவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அந்த விசாரணையில் பிரகாஷ் அந்த சிறுமியை கடத்தி சென்றதும் கட்டாய திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.மேலும் பிரகாஷை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.