மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தொழிலாளி! போலீசார் வழக்கு பதிவு!

0
252
The worker who left his wife and children to suffer! Police registered a case!
The worker who left his wife and children to suffer! Police registered a case!

மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தொழிலாளி! போலீசார் வழக்கு பதிவு!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகையா (45). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.  நேற்று முன்தினம் குழந்தைகள் மற்றும் மனைவியை மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு அவர்களை அங்கேயே அங்கிருந்து வேலைக்கு சென்று உள்ளார்.

பிறகு மீண்டும் மாலையில் வீடு திரும்பிய நிலையில் அவர் திடீரென வீட்டை பூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும்  இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அந்த தகவலின்  பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் போலீசார் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த முருகையா உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஆசைக்கு அழைத்த கணவனை ஆசிட்டில் மிளகாய் பொடியை கலந்து  ஊற்றி ஓட்டம் பிடித்த குடும்ப பெண்!..
Next articleஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை பற்றி வெளியான தகவல்!