உலகிலேயே முதன் முதலாக மிதக்கும் நீச்சல் குளம் ஒன்றை லண்டனில் திறக்கப்பட்டுள்ளது.கண்கவரும் வெளிப்படையான நீச்சல் குளம் இது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்களின் மனதை கவர செய்துள்ளது.
இரண்டு உயரமான கட்டிடங்களின் மேல் பத்தாவது தளத்தில் அந்தரத்தில் காற்றில் பறக்கும் வகையில் கண்ணாடி போன்று வெளிப்படையான நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் தென்மேற்கு பகுதியில் நைன் எலம்ஸ் பகுதியில்தான் இந்த நீச்சல் குளம் அமைந்துள்ளது.
நீச்சல் குளம் Sky Pook என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நீச்சல் குளம் பக்கவாட்டு பகுதிகள் அனைத்தும் கண்ணாடியில் செய்யப்பட்டுள்ளது, இதில் உள்ளவர்கள் வெளியே உள்ளவர்களையும் பார்க்கலாம். வெளியே சாலையில் செல்பவர்களும் நீச்சல் குளத்தில் இருப்பவர்களை பார்க்கலாம். அதுபோன்று கட்டமைக்கப்பட்டுள்ளது.
தரையிலிருந்து சுமார் 115 அடி உயரம் உள்ள கட்டிடங்களை இணைத்து தான் இந்த மிதக்கும் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. 82 அடி நீளம் கொண்டது இந்த மிதக்கும் நீச்சல் குளம். இந்த நீச்சல் குளத்தில் 35 மீட்டர் தூரம் வரை நீந்தி செல்லலாம்.
உலகிலேயே இது போல வெளிப்படையான நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருப்பது முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளம் ஆனது 50 டன் எடை கொண்ட நீரை தாங்குமாம். அதனால் இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
எம்பஸ்ஸி கார்டன் என்னும் நிறுவனம் மூலம் இந்த நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய கட்டுமான பொறியாளர் என் பெயர் Eckersley O, Callaghan . இந்த நீச்சல் குளத்தில் 1.48 லட்சம் லிட்டர் நீர் நிரப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.
எம்பஸ்ஸி கார்டன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நீச்சல் குளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளது. இதைப் பார்த்த மக்கள் மிகவும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் உங்களுக்காக.
https://www.instagram.com/reel/CPluex9pO3X/?utm_medium=copy_link