நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!!

Photo of author

By CineDesk

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!!

CineDesk

The young man flirted with the actress on the bus!! Run away after taking the video!!

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!!

கேரளாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் படப்பிடிபிற்காக  திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் வரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். அந்த பேருந்தில் அங்கமாலி என்னும் இடத்தில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.

இருந்தபோதும் அந்த இளைஞர், நடிகையை தொட்டு பேசியுள்ளார். பிறகு நடிகையிடம் அந்தரங்க உறுப்பைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.  இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த நடிகை பிறகு சுதாரித்துக் கொண்டு அந்த இளைஞரை வீடியோ எடுக்க ஆரம்பித்தார். வீடியோ எடுத்துக் கொண்டே அவரை சரமாரியாக கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

நடிகை கேள்வி கேட்டவுன் பஸ்சில் இருந்து இறங்க முற்பட்டார். இதனால் பேருந்து நிறுத்தப்பட்டது. உடனே அந்த இளைஞர் தப்பித்து செல்ல முயன்றார். ஆனால் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும், நடத்துனரும் அந்த இளைஞரை துரத்தி பிடித்தனர். பிறகு அவரை நெடும்பஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த இளைஞர் விசாரித்த போது அவர் பெயர் சவாத், கோழிக்கோட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. போலீசார் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இது போன்ற சூழ்நிலையில் தனக்கு உதவிய பேருந்து ஊழியர்களுக்கும், சக பயணிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்த நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.