கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!!
கூகுளில் தற்கொலை எப்படி செய்வது என்று தேடிய இளைஞரை இண்டர்போல் அளித்த தகவலின் படி காவல் துறையினர் விரைந்து சென்று வந்துள்ளார்.
மும்பையில் மாலட் என்ற பகுதியில் வசிக்கும் 28 வயதான இளைஞர் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பாக தனது வேலையை இழந்துள்ளார். இதையடுத்து வேறு வேலைக்கு அந்த இளைஞர் முயற்சி செய்து வந்தார்.
ஏற்கனவே இவரது தாயார் கிரிமினல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்பொழுது அந்த இளைஞருக்கு வேலை இல்லாததால் தாயின் ஜாமீன் செலவுகளுக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.
இது போல பல காரணங்களால் அந்த இளைஞர் விரக்தியடைந்துள்ளார். இதனால் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து கூகுளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று தேடியுள்ளார்.
இதையடுத்து கூகுளை கண்காணித்து வரும் இண்டர்போல் அதிகாரிகள் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வது குறித்து தேடியதை பற்றி மும்பை காவல் துறையினருக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
மேலும் அந்த இளைஞர் இணயத்தில் தேடும் பொழுது பயன்படுத்திய மொபைல் எண்ணையும் மும்பை காவல் துறைக்கு இண்டர்போல் அதிகாரிகள் அனுப்பினர். இண்டர்போல் அதிகாரிகள் அளித்த தகவலின் படி குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டு மணிநேரத்தில் அந்த இளைஞரை கண்டுபிடித்தவர்.
பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த அந்த இளைஞருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் அந்த நபருக்கு வேலை வாங்கி தருவதாகவும் காவல் துறையினர் வாக்குறுதி கெடுத்து அந்த இளைஞரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.