சென்னையில் முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசித்து வரும் பட்டதாரி இளம்பெண் கௌதமி என்பவர் ,தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.அதே பகுதியை சேர்ந்த வாட்டர் கேன் சப்ளை செய்து வரும் விஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என இளைஞர் விஜய் அப்பெண்ணிடம் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் திருமணம் குறித்து கௌதம் பேசும்போதெல்லாம் விஜய் தவிர்த்து வந்துள்ளார் .நாளடைவில் சாதியை காரணம் காட்டி பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக கூரப்படுகிறது.
மேலும், விஜய் மற்றும் அவரது தந்தை, சித்தப்பா உள்ளிட்டோர் கத்தியை காட்டி மிரட்டியதாக அப்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பெயரில் காவல்துறையினர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனால் வழக்கு பதிவு செய்த பின்னர் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கௌதமி மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு மாதர் சங்கத்தினர் அப்பெண்ணிற்கு நீதி கேட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
விஜய் மீது நடவடிக்கை எடுக்காததால் அண்மையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் அந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அங்கு வந்த காவல்துறையினர் விரைவில் இளைஞர் விஜய்யை கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததையடுக்கு அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.