சிறுமியை பாலியல் வன்முறை செய்து வீடியோவை தாய்க்கு காட்டி மிரட்டிய இளைஞர்!

Photo of author

By Kowsalya

சிறுமியை பாலியல் வன்முறை செய்து வீடியோவை தாய்க்கு காட்டி மிரட்டிய இளைஞர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது .ஒவ்வொரு நாளும் எங்கேயாவது சிறுமிகள் ,பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் மேலும் இந்த மாதிரியான கொடுஞ் செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது இதற்கு என்னதான் முடிவு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்தச் சிறுமி வீட்டை விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே சென்ற நிலையில் சிறுமியின் உறவுக்காரரான முருகன் என்ற இளைஞன் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று உள்ளார்.

தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அந்த சிறுமியுடன் தனிமையில் இருந்த பொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளான்.

அந்த ஆபாச வீடியோக்களையும் புகைப்படத்தையும் சிறுமியின் தாயிடம் காட்டி தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அருகில் உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்ததின் பேரில் சிறுமியின் உறவுக்காரரான முருகன் என்பவனை  அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து உள்ள போலீசார் அவனுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய திட்டமிட்டுள்ளனர் மற்றும் இந்த ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களை மீண்டும் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த மாதிரியான செயல் எங்கு கொண்டு போய் முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. தாங்களே திருந்தாவிட்டால் இதை தடுக்க முடியாது.