இளைஞரின் சரமாரி கத்திக்குத்து!! சாலையில்கிடக்கும் பிணங்கள்!! அதிர்ச்சியில் மக்கள்!!

Photo of author

By Jeevitha

சீனா: சீனாவின் ஜியாங்சு  மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள இளைனர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 8 பேர் பலி.

சீனாவில் உள்ள ஜியாங்சு  மாகாணத்தில் வுக்ஸி என்னும் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படித்த வந்த 21 வயது இளைஞர் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு செயலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞர் திடீரென ஒரு கத்தியை எடுத்து தனக்கு எதிரில் உள்ளவர்கள் மற்றும் கண்ணுக்கு தெரிபவர்கள் அனைத்து பேரையும் அவர் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். அந்த கொடூர நிகழ்வில் சுமார் 8 உயிர் சம்பவ இடத்திலேயே பறிபோனது. மேலும் இந்த சம்பவத்தில் கத்திக்குத்து அடைந்தவர்கள் 17 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் கடத்த வாரம் ஜூஹாய் நகரில் ஒரு பெண் விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏற்றி கொன்றதில் சுமார் 35 பேர் அந்த சம்பவத்தில் பலியானார்கள். இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதை பார்த்து மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.