உரிமைத்தொகை குறித்து வெளியிட்ட வீடியோவால் இளைஞர் கைது!! சீமான் கண்டனம்!!!
சென்னை: பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ 1000 அரசு வழங்குவது குறித்து வெளியிட்ட வீடியோ மூலம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 20/3/2023 அன்று நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 வரும் செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இதனை சிலர் வரவேற்பதோடு சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்தது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதியானது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து சவுக்கு சங்கரின் ஆதரவாளர் பிரதீப் திமுக அரசு மாற்றிப்பேசி தகுதி எனும் சொல்லை இடைச்சொருகுவதால் திரைப்படத்தின் நகைச்சுவை காட்சியோடு இணைத்து எள்ளல் செய்திருக்கிறார். கேலிச்சித்திரங்களின் நவீன பரிணாம வளர்ச்சிதான் இதுபோன்ற காணொளி இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக மிக மிக அதீதமானது. சமூகத்தை பிளவுபடுத்தும், மண்ணுக்கும்,மக்களுக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் எத்தனையோ பேரை கைது செய்ய மறுக்கும் திமுக அரசு எளிய மக்களின் விமர்சனங்களை சகிக்க முடியாமல் அவர்களை கைதுசெய்து சிறைபடுத்த எண்ணுவது ஜனநாயக விரோதமாகும் என்று சீமான் கூறியுள்ளார்.