பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது!! மாநில போலீசார் அதிரடி!!
புதுச்சேரி சிவசக்தி நகரைச் சேர்ந்த வள்ளி என்பவர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணி செய்து வந்தார் . இந்நிலையில் அவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி பணி முடித்து வீட்டுக்கு சென்ற போது வழியில் மோட்டர் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை அறுத்து சென்றனர்.
இதேபோன்று முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி நகரைச் சேர்ந்த ஸ்ரீவேணி என்பவரிடம் இருந்தும் தங்க சங்கலி பறித்து சென்றனர். மேலும் இதேபோல் அண்ணாசாலை பகுதியிலும் 2 பெண்களிடம் இருந்து தங்க சங்கலி பறிக்கப்பட்டது. இந்த தொடர் நகை பறிப்பு சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நகை பறிப்பு கும்பலை பிடிக்க ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் தனிப்படை உருவாக்கப்பட்டது. இது குறித்து தனிப்படை போலீஸ் விசாரணையை தொடங்கியது.
முதலில் கண்காணிப்பு கேமராவின் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இதன் மூலம் மோட்டார் சைக்கிள் வந்து கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
அதில் முகமது ஜாபர் குருஷி மற்றும் வாரிஷ் கான் இருவரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது விழுப்புரத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கி வந்தது தெரிவந்துள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்திலும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது .
தனிப்படை போலீஸ் இருவரையும் தேடிவந்த நிலையில் பெரம்பை சாலையில் முகமது ஜாபர் குருஷி அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டார் . இந்நிலையில் அவன் கூட்டாளி உத்தரப்பிரதேசத்திற்கு தப்பிச்சென்றது தெரிவந்ததுள்ளது.
அதனையடுத்து நகைகளை விழுப்புரத்திலுள்ள உறவினர் மூலம் விற்றதும் தெரியவந்துள்ளது. மேலும் அவனிடமிருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தனிப்படை போலீசார் தப்பி ஓடிய நபரை தேடிவருகிறார்கள்.