முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை!

0
133
Theft due to Facebook friendship! Suicide for fear of knowing the truth!
Theft due to Facebook friendship! Suicide for fear of knowing the truth!

முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை!

முகநூல் பழக்கத்தின் காரணமாக பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. அறிமுகம் இல்லாதவர்களை எளிதாக நண்பர்களாக்கி விட இணையத்தில் ஒரு குழு எப்பொழுதும் தயாராகவே உள்ளது. இதில் நண்பர்கள் ஆவதன் மூலம் அவர்களது சூழ்நிலையை நன்கு தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் தனக்கு சாதகமாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். 44 வயதான இவர் கோவை மாவட்டம் சோமனூரில், ஹோட்டல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கங்காதேவி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் பெங்களூருவில் படித்து வருகிறார். கங்காதேவி தனது வீட்டின் அருகிலேயே ஒரு அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த ஆறாம் தேதி இரவு வெகுநேரமாகியும், மனைவி வீடு திரும்பாததால் கணவர் ஸ்ரீனிவாசன் அழகு நிலையம் சென்று அவரை அழைத்து வர போனார்.

அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையிலும் கங்காதேவி இருந்தார். இது குறித்து விசாரித்தபோது மூன்று கொள்ளையர்கள் தன்னை கட்டிப் போட்டுவிட்டு 19 பவுன் நகையை கொள்ளையடித்து உடன் அவர்கள் தன்னை பாலியல்  பலாத்காரம் செய்து விட்டதாகவும் அழுதபடியே கூறினார். இந்த சம்பவம் குறித்து கணவர் போலீசில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறும்போது, கங்காதேவி மறுத்துள்ளார்.

ஆனால் ஸ்ரீநிவாசன் போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற கங்காதேவி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த மாதம் கங்காதேவியின் செல்போன் ஒன்று திருட்டு போனதாக, கணவரிடம் தெரிவித்து இருந்தது தெரியவந்தது.

அந்த போன் தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்து விசாரிக்கும் போது மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் அந்த போனை பயன்படுத்தி வருவதை கண்டுபிடித்தனர்.இவரின் வயது 42 ஆகும். இதனை தொடர்ந்து கங்காதேவி செல்போனின் மூலம் யாருடன் எல்லாம் பேசியுள்ளார் என்று அந்த நம்பரை ஆய்வு செய்தபோது, அவர் அதில் முத்துப்பாண்டி உடன் தொடர்ந்து பலமுறை பேசி இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து ஊட்டியில் பதுங்கியிருந்த முத்துப்பாண்டி கைது செய்தனர். அவர் பல திடுக்கிடும் உண்மைகளை போலீசாரிடம் தெரிவித்தார். கங்கா தேவிக்கும், முத்துப்பாண்டி க்கும், இடையே கள்ளக்காதல் இருந்ததாகவும், அதனால் அவரது நகைகளை முத்துப்பாண்டிக்கு கொடுத்துவிட்டு, கணவருக்கு தெரியாமல் இருப்பதற்காக, தன்னை கட்டி போடுமாறு கூறியதாகவும் நாடகம் நடத்தி உள்ளார்.

இதனையடுத்து போலீசார் அந்த முத்துப்பாண்டியை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் இந்த பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. மேலும் அவரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Previous articleஅட., நம்ம ஆண்ட்ரியாவா இது! கல்லூரி மாணவியாக மாறிய ஆண்ட்ரியா!
Next articleசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க இதுதான் காரணமா? உண்மையை கூறிய பிரபலம்!