சிறைச்சாலை உள்ளே திருட்டு!!போலீசாருக்கு வந்த சோதனை !
கோவை மத்திய சிறைச்சாலை ,கோவை காந்திபுரம் மையப்பகுதில் அமைந்துள்ளது. இந்தச்சிறை 1872 ஆண்டு கட்டப்பட்டது. இந்த சிறையில் 2208 கைதிகள் வரை வைத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது 167.76 ஏக்கர் உள்ளடக்கிய ஒரு சிறையாகும். இந்த சிறையில் எராளமான தலைவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன .இதனை தொடர்ந்தது சிறையில் இடப்பற்றாக்குறை எற்ப்பட்டுள்ளது.அதனால் சிறைச்சாலையை கோவை மத்தம்பாளையம் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிறை வளாகத்திற்குள் சந்தன மரங்கள் இருக்கின்றன . இதை நோட்டம் விட்ட திருட்டு ஆசாமிகள் இரவுநேரத்தில் மரத்தை வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கோவை மத்திய சிறைச்சாலையின் ஜெய்லர் சிவராஜன் போலீசார் உடன் கண்காணிப்பு பணியில் இருந்தார். அப்போது, அங்கு இருந்த சந்தன மரம் ஒன்று அறுத்து எடுத்து செல்லப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.