கோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்!

Photo of author

By Hasini

கோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்!

Hasini

Their movement in Coimbatore! Police warned!

கோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்!

கோவை மதுக்கரை மார்க்கெட்,  ஸ்ரீ ராம் விலாஸ் பகுதிகளில் தொடர்ச்சியான லைன் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் லாட்ஜ் உரிமையாளர் ரவிக்குமார், ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் ரவிச்சந்திரன் வெங்கட், ஓய்வுபெற்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் சதீஷ் குமார் உட்பட ஏழு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்ட நிலையில், போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் என்ன நடந்தது என ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டு கதவுகளை உடைத்து கைவரிசை காட்டும் கடப்பாறை கொள்ளையர்கள் நடமாட்டம் அதில் பதிவாகி இருந்தது. அதில் சிலர் டவுசர்கள் அணிந்தவாறு மேல்சட்டை அணியாமல் கையில் கடப்பாரைகளுடன் வலம் வருவதும் பதிவாகி உள்ளது.

அவர்கள் பொதுமக்களிடமிருந்து பிடிபடாமல் இருக்க இவர்கள் உடலில் எண்ணெய் தடவிக்கொண்டு வெறும் மேனியுடன் வந்து கைவரிசை காட்டுவார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளையர்கள் வெளி மாவட்டம் அல்லது வெளிமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்து உள்ளனர். இந்த நிலையில் கேமராவில் சிக்கிய காட்சிகளை வைத்து கொள்ளையர்களின் உருவங்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் மக்களையும் பத்திரமாக இருக்கும் படியும் கூறி உள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்க்கும் போது, தீரன் படத்தில் வரும் பீரோ புல்லிங் திருடர்கள் போல இவர்கள் நடக்கலாம் எனவும் தெரிகிறது.