தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்!

Photo of author

By Rupa

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்!

Rupa

Grievance meeting for disabled people! Announcement made by the Collector!
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்!
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (29.07.2022) வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்
நடைபெறவுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்து பயன்பெறவும், மேலும் தங்களது குறைகளை மனுக்களாக குறைதீர் தின கூட்டத்தில் வழங்கிடலாம்.
விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது கண்காணித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோவிட்-19 வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, கூட்டத்தில் கலந்து கொண்டு
பயன்பெற வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர். க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.