தேனி மாவட்டம் அரசு  மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்த ஆலோசனைக் கூட்டம்! மக்களின் பங்களிப்பாக ரூபாய் 2000 மற்றும் ஸ்மார்ட் டிவி!

தேனி மாவட்டம் அரசு  மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்த ஆலோசனைக் கூட்டம்! மக்களின் பங்களிப்பாக ரூபாய் 2000 மற்றும் ஸ்மார்ட் டிவி!
அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி கருவேல்நாயக்கன்பட்டியில் நடந்து முடிந்த  பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டி யில் அரசு  மேல்நிலைப் பள்ளியாக
தரம் உயர்த்த வேண்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு நிகழ்வுகளாக பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும் கல்வி நலனுக்காகவும் ஊர் மக்களின் பங்களிப்பாக பள்ளி வளர்ச்சிக்காக ரூபாய் 2000செலுத்தி தங்களை பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினராக இணைத்துக் கொண்ட நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் ஆங்கில வகுப்பிற்காக மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக திரு . கருப்பசாமி அவர்களும் அவர்களது நண்பர்களும் இணைந்து ரூபாய் 50000உரிய SMART TV50 inch  மற்றும் இதர பொருட்களும் இப்பள்ளிக்கு வழங்கி உள்ளார் ..
இவ் ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி நகர் மன்ற உறுப்பினர் திரு கடவுள் அவர்களுக்கும், இப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஊர் பெரியோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கப்பட்டனர்.

Leave a Comment