போதையில் தள்ளாடும் தேனி மாவட்டம்! அலட்சியம் காட்டும் போலீஸ்!
சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கூடலூரில் வைத்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அவர்களின் தனிப்பிரிவு பெரிய அளவில் கஞ்சா வேட்டை நடத்தி மூட்டை மூட்டையாக கஞ்சாவை பிடித்தனர். அதேபோல் குட்கா பாக்கு வைத்திருந்த இன்னொரு கும்பலையும் காவல்துறை கைதுசெய்தது .மதுரை தேனி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கஞ்சா கும்பல்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
டாஸ்மார்க் மூடியவுடன் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் 12 மணி வரை தேனி மாவட்டத்தில் பல இடங்களில் டாஸ்மார்க் சரக்கு பிளாக்கில் விற்பனை செய்யவும் கஞ்சா போதை மாத்திரை போன்றவைகளை விற்பனை செய்யவும் மிகப்பெரிய அளவில் ஒரு குழுவே இயங்கி வருகிறது. கடந்த காலங்களில் வேலை வாய்ப்பை இழந்த பலரும் இத்தகைய விற்பனையில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி வருகிறார்கள்.
வருஷநாடு முதல் காட்ரோடுவரை மாவட்டம் முழுவதும் பரவலாக இயங்கி வரும் இந்த கும்பல்களால் காவல் துறைக்கு ஒரு பெருத்த தொகை மாமூலாக போய் சேருகிறது. பல காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் வேலை செய்துவரும் காவலர்கள் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு பணங்களை வசூல் செய்து கொடுப்பது சமூக குற்றவாளிகளுக்கு ஆதரவாக விளங்குவது போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வியாபாரி மேல் வழக்குப் பதிவு செய்ய இன்னொரு கஞ்சா வியாபாரியிடம் கஞ்சா வாங்கி காவலர் வீட்டில் பதுக்கி வைத்த காரணத்தினால் ஆய்வாளர் ஒருவர் தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஒரு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் மாவட்டத்தில் உள்ள மனமகிழ் மன்றங்கள் இயங்கி வரும் தனியார் பார் இதுவும் முறையான அரசு சட்டதிட்டங்களை கடைபிடிப்பது கிடையாது. அவர்களும் அவரவர் பங்குக்கு மது விற்பனையில் என்னென்ன முறைகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வருகிறார்கள்.போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் மெடிக்கல் ஷாப் இயங்கிவருகின்றன.
பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார் ஒருவர் மட்டும்தான் மெடிக்கல் ஷாப் ஓனர்களை அழைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. என்று விழிப்புணர்வு கூட்டம் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.இவர் போல் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் மற்ற டிஎஸ்பிக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி மாணவர்களிடம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அதைவிடுத்து மக்களிடம் விழிப்புணர்வு செய்தியை எழுதும் நேர்மையான பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை கொலை குற்றவாளிகள் போல் துரத்துவது சமூக குற்றவாளிகளை தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த சொல்வது.
அதை காரணமாக வைத்து அப்பாவிகளை தூக்கி சிறையில் அடைப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு குற்றம் செய்தவர்கள் யார் என்பதை விசாரித்து அவர்களை ஊக்குவிப்பது அவர்களுக்கு துணை நிற்பதை தவிர்க்க வேண்டும்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் சரகம் எல்லைக்குள் எத்தனை இடங்களில் செல்லிங் பாயின்ட் என்று சொல்லப்படும் மது விற்பனையும் போதை விற்பனையும் நடக்கிறது என்பது அதிகாரிகளுக்கு தெரியுமா? அப்படி தெரியவில்லை என்றால் நம்மிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இல்லை ஒவ்வொரு இடமாக பட்டியலிட சொன்னாலும் பட்டியலிட்டு நமது தளத்தின் மூலம் சொல்ல தயாராக இருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக சொல்ல தயங்கி தான் நம்மிடம் சொல்கிறார்கள் அதை பத்திரிக்கையில் பதிவுசெய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சுவரொட்டிகளை ஓட்டினாள் புடிடா அவனை பொடனியில் அடிடா, ஆர்ப்பாட்டம் நடத்துடா அவனை ,போலி பத்திரிக்கை காரன், RNI இல்லாத பத்திரிக்கை நடத்துகிறான். அவன்மீது போடுடா பொய் கேசை ,வீடு புகுந்து தூக்குடா என்று பத்திரிக்கையாளர் மீது தனிப்பட்ட விரோதம் கொண்டு சமூகவிரோதிகள் கொடுக்கும் மாமுல் பணத்திற்கு வேலை செய்யாமல் மக்களுக்காக வேலை செய்தால் நல்லது.
தேனி,ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம், பகுதியில் காவல் நிலையத்தில் வேலை செய்யும் தலைமை காவலர் முதல் தனிப்பிரிவு காவலர் வரை பலரும் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள்
தொடர் குற்றம் செய்து வரும் குற்றவாளிகளுடன் இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நட்பு ஏற்பட்டு விடுகிறது. சில குற்றவாளிகள் போலீசுக்கு தகவல் சொல்லும் நபர்களாக மாறிவிடுகின்றனர். சில குற்றவாளிகளுடன் சேர்ந்து காவல் துறையில் பணிபுரியும் நபர்கள் இரவானால் சரக்கடிப்பது. அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது.
மேலதிகாரிகள் சிரமம் கொடுத்தால் குற்றவாளிகள் மூலமாக மேலதிகாரிகளுக்கு சிரமம் கொடுப்பது.அதிகாரிகள் லஞ்சம் பெற்றால் அதை குற்றவாளிகள் மூலம் சமூக வெளியில் வெளியிடச் செய்வது என்று பல பிரச்சினைகளை அதிகாரிகளுக்கு ஏற்படுத்துவது என்றுசமூக விரோதிகள் உடன் சேர்ந்து கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் இந்த காவலர்களை அவர்கள் சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தென் மண்டல ஐஜி அவர்களின் முக்கிய பணி என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.