தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க..

0
161

தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க..

முதலில் அதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்.தேவையான பொருள்கள் இட்லி மாவு – ஒரு கப், பூண்டு – 25 பல், இட்லி மிளகாய் பொடி – 2 மேசைக்கரண்டி, எண்ணெய் – 3 தேக்கரண்டி

எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.செய்முறை , பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.வாணலியில் அல்லது தோசைக்கல்லில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.பூண்டை இரண்டு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட்டு ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி அளவு தோசை மாவை எடுத்து ஊற்றி தோசை வார்க்கவும்.மேலே இட்லி மிளகாய் பொடி தூவி அதன் மேல் வதக்கி வைத்திருக்கும் பூண்டை தூவவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். தோசை கரண்டியை வைத்து ஒரு முறை தோசையின் மீது அழுத்தி விடவும். திருப்பி போடும் போது பூண்டு கீழே விழாமல் இருக்கும்.தோசை வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.மொறுமொறு பூண்டு தோசை ரெடி. இதனுடன் எதுவும் தொட்டுக் கொள்ள தேவையில்லை. விரும்பினால் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

Previous articleநகைக்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்த மர்ம நபர்கள்! ஏமார்ந்து போன மூதாட்டி!
Next articleவழுக்கையை போக்கும் மாம்பழம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!