ஆட்டத்தையே மாற்றும் 2026.. எடப்பாடி எடுக்கப்போகும் முக்கிய முடிவு!! விஜய் கொடுத்த கிரீன் சிக்னல்!!

Photo of author

By Rupa

ADMK TVK: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தவெக வுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் 2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டணி குறித்தும் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சசிகலா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் மீண்டும் இணைந்தால் அதிமுகவில் விரிசல் உண்டாகாது என மாஜி அமைச்சர்கள் சிலரின் குரல் ஓங்கியது.

ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எடப்பாடி அவர்கள் முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இவ்வாறு இருக்கையில் விஜய் மாநாட்டில் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என பச்சை சிக்னல் கொடுத்தது மட்டுமின்றி திமுக மற்றும் பாஜகவிற்கு நாங்கள் எதிரி என்றும் கூறியுள்ளார். இவை அனைத்தும் தற்சமயம் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்திருப்பதால் கட்டாயம் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தது போல 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலையும் சந்திப்போம் என கூறினார். அந்த வகையில் இந்த கட்சியை அடுத்து தவெக வுடன் கூட்டணி வைப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.