செல்போன்களை சார்ஜ் போட விதிகள் உள்ளன!! யாருக்காவது தெரியுமா?

0
235

செல்போன்களை சார்ஜ் போட அதற்கென சில விதிகள் உள்ளன. அவ்வாறு விதிகளின்படி சார்ஜ் போடுவதே பாதுகாப்பானதாக இருக்கும்.

இன்று அனைவரும் வீடுகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவரும் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாகி கொண்டிருக்கும் காலமாக இது உள்ளது. ஏனெனில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன்களில் வீடியோ கேம் விளையாடுவது மற்றும் வீடியோ பார்ப்பது என்று செல்போனுக்கு உள்ளேயே சென்று வருகின்றனர். பெரியவர்களும் பேஸ்புக் பார்ப்பது இன்ஸ்டாகிராம் பார்ப்பது என்று அதிக நேரம் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு செய்வதனால் ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் அடிக்கடி போட வேண்டி உள்ளது. சில நேரங்களில் செல்போன்கள் சூடாகி வெடிப்பதும் உண்டு. அவற்றை தடுக்க வேண்டும் என்றால் செல்போனிற்கு முறையாக சார்ஜ் போடப்பட வேண்டும்.

சார்ஜ் போடும் முன் செல்போனில் பேட்டரி முழுவதுமாக தீரவேண்டும். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி செய்தால் ஸ்மார்ட்போன் பேட்டரி பாதிக்க வாய்ப்புள்ளது. நம்முடைய செல்போன் பேட்டரி நல்ல நிலையில் இருக்க வேண்டுமெனில், 20% சார்ஜ் காட்டும்போது தான் மொபைலை சார்ஜரில் சொருக வேண்டும். இதில் சார்ஜ் 100% ஏறும் வரை காத்திருக்காமல் 80 முதல் 90 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு செய்யவில்லை என்றால் சீக்கிரமாகவே செல்போன்களில் உள்ள பேட்டரி போய்விடும் என்றும், செல்போன்களின் காலம் ஒன்றிலிருந்து ஒன்றரை வருடத்திற்கு மட்டுமே வரும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous articleஉயிரை பறிக்கும் உணவுப் பொருட்கள்!! ஐயையோ இதில் இவ்வளவு விஷம் நிறைந்திருக்கா?
Next articleதிருப்பதிக்கு செல்வோர் நேரடியாக ஸ்ரீவாரி தரிசனத்திற்கு செல்வது தல புராணத்தின் படி மிகப் பெரிய தவறு!!