நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் பச்சை மாங்காயில் இத்தனை நன்மைகள் நிறைந்திருக்கா!!

Photo of author

By Divya

நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் பச்சை மாங்காயில் இத்தனை நன்மைகள் நிறைந்திருக்கா!!

Divya

கோடை காலத்தில் விற்பனைக்கு வரும் மாம்பழம் அனைவரின் பேவரைட்டாக இருக்கிறது.இதன் சுவை மற்றும் வாசனை அனைவரையும் சுண்டி இழுப்பவையாக உள்ளது.குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் ருசிக்க ஆசைப்படும் பழமான மாம்பழம் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.

ஆனால் மாம்பழத்தைவிட பச்சை மாங்காயில் தான் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.பச்சை மாங்காயை உப்பு,மிளகாய் தூளுடன் சாப்பிடும் பொழுது அதன் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.

பச்சை மாங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1)இந்த பச்சை மாங்காயை சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்.உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடலாம்.இதில் குறைவான கலோரி இருப்பதால் உடல் பருமனாக இருப்பவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

2)நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் பச்சை மாங்காய் தவிர்ப்பது நல்லது.கர்ப்பிணிகள் பச்சை மாங்காய் சாப்பிட்டால் வாந்தி,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் கட்டுப்படும்.

3)பச்சை மாங்காய் சாப்பிட்டால் உடலில் எனர்ஜி அதிகமாகும்.பச்சை மாங்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

4)வியர்க்குரு பிரச்சனை இருப்பவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடுவதால் அதன் அபாயத்தை தடுக்கலாம்.

5)வைட்டமின் சி சத்து நிறைந்த பச்சை மாங்காய் இரத்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

6)மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பச்சை மாங்காய் சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

7)பச்சை மாங்காயை நறுக்கி தயிரில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

8)பல் ஈறுகளின் வலிமை அதிகரிக்க பச்சை மாங்காயை உட்கொள்ளலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பழுக்காத மாங்காய் சாப்பிடலாம்.

பச்சை மாங்காய் அதிகம் சாப்பிட்டால் என்னாகும்?

ஒருவர் அளவிற்கு அதிகமாக பச்சை மாங்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு,செரிமானப் பிரச்சனை,வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளை சந்திக்கக் கூடும்.