மூக்குத்தி அணிவது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். தற்போது உள்ள ஃபேஷன் உலகத்திலும் இது பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு இந்த மூக்கு குத்தும் பழக்கம் இல்லை.
பருவ வயது அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சில விதமான அசுத்த வாயுக்கள் இருக்கும். மூக்கின் மடல் பகுதியில் மூக்கு குத்துவதன் மூலம் நரம்பு மண்டலத்தில் இருக்கும் அசுத்த வாயுக்கள் வெளியேறும். பெண்கள் மூக்கு குத்துவதால் சளி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், ஒற்றை தலைவலி, பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், மனதடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
உடலில் இருக்கும் வெப்பத்தை சேகரித்து தனக்குள் வைத்துக் கொள்ளும் ஆற்றல் தங்கத்திற்கு உள்ளது. மூக்குப் பகுதியில் ஒரு துளையிட்டு அதில் தங்கத்தால் செய்த மூக்குத்தியை அணிவதால் அந்த தங்கம் உடலில் இருக்கும் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் அவர்களுக்கு மூக்கில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூக்கு குத்திக் கொள்வதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலி குறைவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இடது மூக்கு துவாரத்தில் உள்ள சில நரம்புகளுக்கும் பெண் இனப்பெருக்க உறுப்புக்களுக்கும் தொடர்பு இருப்பதால், இடது பக்கத்தில் மூக்கு குத்திக் கொள்ளும் பெண்களுக்கு பிரசவம் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மண்டை ஓட்டுப் பகுதியில் காணப்படும் சில அசுத்த வாயுக்களை அகற்றுவதற்கு தான் மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்கள் மூக்கு சம்பந்தமான தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கின்றனர். மேலும், இது முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவியாக இருக்கிறது.
நமது மூளையின் அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள் உணர்ச்சிகளை செயல்படுத்தும். இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு அதிகப்படுத்த மூக்குத்தி தேவைப்படுகிறது. பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தியானது, வலது புற மூளையையும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தியானது இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது. இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடது புறம் தான் அணிய வேண்டும். இடது புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.