கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

0
329
#image_title

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

பரிகாரம் 01:

மிகச் சிறிய மண் செம்பு மற்றும் நவதானியம் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அந்த மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும்.
பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும்.

மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் ஒரு தட்டில் பறவைகளுக்கு உணவாக வைத்து விடவும். பிறகு மறுபடியும் புதிதாக நவதானியம் வாங்கி அந்த சிறிய மண் பானையில் வைக்கவும்.

தொடர்ந்து 2 மாதங்களுக்கு செய்து வர பண வரவில் முன்னேற்றம் ஏற்பட்டு கடன் தீர ஆரம்பிக்கும்.

பரிகாரம் 02:

வெள்ளிக் கிழமை அன்று ஒரு பெரிய வெற்றிலையை எடுத்துக் கொண்டு 3 கொட்டைப் பாக்கு வைத்து சிறிது புனுகு மற்றும் அரகஜா தடவிக் கொள்ளவும். அடுத்து அந்த வெற்றிலை மீது 3 துண்டு பச்சை கற்பூரம் வைத்து, சிறிது மஞ்சள் தூள் வைத்து 1 தர்பைப்புல் எடுத்து நறுக்கி வைத்து கொள்ளவும்.

பின்னர் அந்த வெற்றிலையை நான்காக மடித்து மஞ்சள் நூலால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். மறு வெள்ளிக் கிழமை இதை மாற்றிக் கால் படாத இடத்தில் போட்டு புதியதாக செய்து வைக்கவும். வாரம் ஒருமுறை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இதை செய்து வந்தால் 2 மாதங்களில் பண வரவில் நிச்சயம் பெரிய முன்னேற்றம் இருக்கும்.

இதன் காரணமாக கடன் விரைவில் தீரும். நாம் பரிகாரம் செய்ய பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Previous articleதுரியோதனனின் மனைவி பற்றி தெரியுமா? பாம்புக்கு அவள் மீது காதல் வந்த கதை தெரியுமா!
Next articleநெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!!