சிறுநீரக செயலிழப்பு: உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகத்தின் செயல்பாடு வழக்கத்தைவிட பதினைந்து மடங்கு குறைந்தால் அவை செயலிழக்கப் போகிறது என்று அர்த்தம்.
சிறுநீரக செயலிழப்பு தீவிரமானவர்கள் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.அதேபோல் டயாலிசிஸ் மூலம் சிறுநீரக செயலிழப்பை சரி செய்யலாம்.சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட்டால் அவை இரத்தத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகளை சமநிலையாக்கும்.சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் அவை உடலில் போதிய வேலைகளை செய்யாது.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட முக்கிய காரணங்கள்:
**இரத்த அழுத்தம்
**சர்க்கரை நோய்
இந்த இரண்டு பாதிப்புகளும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.மருத்துவமனைக்கு செல்லும் பெரும்பாலான நோய்களிகளுக்கு இந்த இரண்டு பிரச்சனை காரணமாகத் தான் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்:
1)கால் பாதங்கள் வீங்குதல்
2)கணுக்கால் பகுதியில் வீக்கம் உண்டாதல்
3)பகல் நேரத்தில் சோர்வு
4)வயிற்று வலி
5)சுவை உணர்வு இழத்தல்
6)பசியின்மை
7)உடல் எடை இழப்பு
8)தசை பிடிப்பு
9)மூட்டு வலி
10)குறைவான சிறுநீர் வெளியேறுதல்
சிறுநீரக செயலிழப்பால் நாம் சந்திக்க கூடிய பாதிப்புகள்:
**இதய நோய் பாதிப்பு
**உயர் இரத்த அழுத்தம்
**இரத்த சோகை
**எலும்பு கோளாறு
சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
அடிக்கடி சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.மருத்துவர்கள் அறிவுரையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மற்றும் மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.சிறுநீரக செயலிழப்பு தீவிரமானால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.