உங்களில் சிலர் சில நேரம் தொடர்ந்து இருமல் பிரச்சனையை அனுபவித்து இருப்பீர்கள்.கட்டுப்படுத்த தொடர் இருமலை தான் கக்குவான் இருமல் என்று அழைக்கிறோம்.இதை பெர்டுசிஸ் என்றும் அழைப்பார்கள்.இந்த தொடர் இருமல் பிரச்சனையால் சுவாசிப்பதில் கடும் சிரமம் உண்டாகும்.
கக்குவான் இருமல் பாதித்தவர்கள் இரும்பும் பொழுது காற்றின் மூலம் பிறருக்கு எளிதில் பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது.கக்குவான் இருமலை மருந்து மாத்திரை இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்வது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது.
கக்குவான் இருமல் காரணங்கள்:
போர்டெடெல்லா பெர்டுசிஸ் என்ற பாக்டீரியாவால் இந்த கக்குவான் இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.
கக்குவான் இருமல் அறிகுறிகள்:
*சுவாசிப்பதில் சிரமம் சந்தித்தல்
*இரும்பும் பொழுது வாந்தி வருதல்
*உடல் சோர்வு ஏற்படுதல்
*சரும நிறம் நீலமாக மாறுதல்
கக்குவான் இருமலுக்கு சிறந்த வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி துண்டு – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
**இந்த இஞ்சி துண்டுகளை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
**இஞ்சி பானம் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
**அடுத்ததாக ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து பருகினால் கக்குவான் இருமல் குணமாகும்.அதேபோல் இஞ்சி சாறில் தேன் சேர்த்து பருகினால் கக்குவான் இருமல் குணமாவதோடு இரைப்பை புண்கள் ஆறும்.இஞ்சி சாறு இருமல்,தொண்டை கரகரப்பு,தொண்டை வலி,நுரையீரல் பாதிப்பு,வறட்டு இருமல் போன்ற பாதிப்புகளை முழுமையாக குணப்படுத்த உதவுகிறது.
**தினம் ஒரு கிளாஸ் இஞ்சி பானம் பருகி வந்தால் தொண்டைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.அதேபோல் நல்லெண்ணெயில் இஞ்சி போட்டு காய்ச்சி மூக்கு பகுதியில் விட்டால் சுவாசம் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.