நடிகை ரோஜா அவர்கள் நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் காலூன்றி வருகிறார். கணவர் இயக்குனர் செல்வமணி இவர்கள் இருவருக்கும் இருந்த மிகப்பெரிய கனவு மற்றும் இவர்களுடைய வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்களை youtube சேனலுக்கு பகிர்ந்து இருக்கின்றனர்.
அதன்படி, இந்தியா கிளிப்ஸ் யூடியூப் சேனலுக்கு நடிகை ரோஜா அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-
தனக்கு திருமணத்திற்கு முன்பாக கர்ப்பப்பையில் ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் அதனால் தனக்கு குழந்தை பிறப்பது மிகவும் கடினமான ஒன்றாக அல்லது குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பே இருக்காது என்பது போல மருத்துவர் தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகவும் ஆனால் அது தனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். தன்னுடைய முதல் குழந்தை கன்ஃபார்ம் செய்த பொழுது மருத்துவர் உடனடியாக தெரிவித்ததாகவும் அவர் அதனை மிகவும் ஆச்சரியமாக சந்தோஷமாகவும் எடுத்து பேசிய பொழுது இதற்கு ஏன் இவ்வளவு ஆச்சரியப்பட வேண்டும் என்பது போல சந்தேகித்து கேட்ட பொழுதுதான் நடந்து உண்மை அனைத்தையும் தன்னிடத்தில் மருத்துவர் கூறியதாக நடிகை ரோஜா தெரிவித்திருக்கிறார்.
குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை எனக் கூறிய தனக்கு கர்ப்பம் உருவானதை அனைவரும் ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண்டதாகவும் அதனால் தன் மிகவும் கவனத்தோடு இருந்து அந்த குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும் நடிகை ரோஜா தெரிவித்ததோடு தன்னுடைய இரண்டாவது கர்ப்பத்தின் பொழுது சரியாக 5 ஆவது மாதத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அப்பொழுது தனக்கு கருப்பையில் இருந்து ரத்தம் வழிந்ததை எடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மிகவும் சீரியசான நிலமைக்கு சென்றதாகவும் அதனை தொடர்ந்து 7 ஆவது மாதத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றும் ஆனால் அவன் தன் உயிரோடும் கிடைப்பானோ இல்லையோ என்பது போன்ற ஏக்கம் இருந்ததாகவும் அதனால் அவன் மீது தனக்கு தனி பாசம் என்றும் நடிகை ரோஜா தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் செல்வமணி இது குறித்து கூறுகையில் தங்களுக்கு 24 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்றும் அதில் 12 குழந்தைகளை நாங்கள் இருவரும் இணைந்து கற்றுக்கொள்ள நினைத்தோம் என்றும் மீதி 12 குழந்தைகளை உலகத்தில் உள்ள வெவ்வேறு நாடுகளில் இருந்து தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது என்றும் வெளிப்படையாக தெருவித்திருக்கிறார்.