ADMK DMK:பட்ஜெட் கூட்டு தொடரில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து தங்கம் தென்னரசு ஒதுக்கிய தொகை ரீதியாக விவாதம் நடந்தது. 2000 கோடியில் இருவது லட்சம் மாணவர்களுக்கு எப்படி தரமான லேப்டாப் வழங்க முடியும் என தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார். முதலாண்டு 2000 கோடியும் அடுத்த ஆண்டு 2000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மாணவர்களுக்கு தலா 20000 மதிப்பில் லேப்டாப் வழங்கப்படும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
அதைடு விட்டு விடாமல் பாஜக அதிமுகவை கைப்பற்ற நினைக்கிறது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். இது ரீதியாக, உங்கள் மடி கனத்தை வேறொருவர் பறிக்க நினைக்கிறார்கள், மிகுந்த கவனம் தேவை. உங்கள் மீது உள்ள அக்கறையால் தான் இதை கூறுகிறேன். அதுமட்டுமின்றி உங்கள் கூட்டல் கழித்தல் கணக்குகளையும் வேறொருவர் சாணக்கியமாக செய்து கொண்டிருக்கிறார் இன்று எச்சரித்துள்ளார். தங்கம் தென்னரசு இவ்வாறு கூறியதற்கு எடப்பாடி பழனிச்சாமி செய்தியார்களிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் எடப்பாடி கூறியதாவது, பட்ஜெட்டில் போதுமான நிதி உதவிகள் இல்லாமல் வார்த்தை ஜாலங்கள் தான் இடம்பெற்றது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 5.18 லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது தற்போது திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 4.5 லட்சம் கடன் அதிகரித்துள்ளது. இது ரீதியாக நிதி மேலாண்மை குழு அமைக்கப்படும் அவர்கள் தற்போது வரை முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. கடனும் குறைந்த பாடு இல்லை. நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் மட்டும் கவனித்தால் போதும்.
எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆடு நனைகிறது அதை பார்த்து ஓனைய அழுதுததாம் அந்த கதை போல்தான் இது உள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் கொள்கை வேறு கூட்டணி வேறு. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அதிமுகவுடன், அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் திமுகவுடன் கூட்டணி வைத்ததுண்டு. ஆனால் கொள்கை என்பது ஒன்றுதான். கூட்டணியானது, கட்சியின் வாக்குகள் சிதறப்படாமல் இருப்பதற்காக தான் அமைக்கப்படுகிறது. அதேபோல இவர் கடைசியில், அதிமுக ஒரு கணமும் தன்மானத்தை இழக்காது என்று கூறியுள்ளார். அதாவது மீண்டும் பாஜகவுடன் தன்மானத்தை இழந்து இணைய மாட்டோம் என்பதை திமுகவிற்கு பதிலடியாக கொடுத்துள்ளார்.