ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Photo of author

By CineDesk

ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ்!!

ஆவின் பாலின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை , என்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடையே கூறியுள்ளார்.

தமிழக அரசின் கீழ் இயங்கிகொண்டிருக்கும் ஆவின் பால் நிறுவனமானது மற்ற தனியார் பால் நிறுவனங்களை விட விலையை குறைத்து தான் விற்பனை செய்து வருகின்றது,இருந்தும் இந்த ஆவின்பால் நிறுவன தயாரிப்பில் எந்த பொருட்களிலும் தரம் குறைவாக இருந்ததே இல்லை.

ஆவின் பாலின் விலையானது உயர்த்தப்படுமா? என்று ஏராளமான சந்தேகங்கள் எழுந்தது, அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

ஆவின் பாலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ,பாலின் விலையானது உயர்த்தப்படவும் வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆவின் பொருட்களின் அளவிலும் தரத்திலும் எந்த சமரசமும் நாங்கள் செய்யவில்லை,என்றும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய தேவையுள்ளதாகவும். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி முடிவெடுப்போம் என்றும் அவர் கூறினார்.