இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

0
75
Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!
Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!

இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.கடந்த ஆட்சி முதல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சி வரை அனைவரும் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது ஆட்சி அமர்த்தியதால் மக்களுக்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் அதிக நலத்திட்டங்களை செய்து வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பணியமர்த்திய நாளில் பெண்களுக்கு உதவியாக, கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அமல்படுத்தியது.அதனையடுத்து தற்போது பல திட்டங்களை அமல்படுத்தியும் வருகிறது.

பெண்களுக்கென்றே பால் விலையும் குறைக்கப்பட்டது.அதனையடுத்து பல நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.தற்போது மக்கள் திமுக நல்லாட்சி செய்து வருகிறது என்று எண்ணி வருகின்றனர்.அதுமட்டுமின்றி திமுக ஆட்சி அமர்த்தி 100 நாள் கொண்டாடும் விதமாக முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்குதல் நடைபெற்றது.இதனால் விவசாயிகள் பலர் பலனடைந்தனர்.கரும்பு விவசாயிகளுக்கு ஊதியத்தொகையை அதிகரித்து ஆணையிட்டனர்.மேலும் மாடி விவசாயம் போன்றவற்றிக்கு மானியம் வழங்கப்படுவதாகவும் கூறினர்.

இதனையடுத்து போக்குவரத்துறை ராஜகண்ணப்பன் கூறியது,தற்போதது கட்டணமில்லா பேருந்து இயக்கத்தால் பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.அதனையடுத்து தற்போது கிராமப்புறங்களில் போதுமான அளவு பேருந்து வசதிகள் இல்லை.அதனால் கிராமப்புற மக்கள் அதிகப்படியானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.அவர்களின் நிலையை கண்டு தற்பொழுது மினி பேருந்துகள் இயக்கப்படுவது அமலுக்கு வருகிறது என்று கூறினார்.

இந்த பேருந்து வசதியும் எந்தவித தடைகள் இன்றி செயல்படும் என்றும் கூறினார்.கிராமப்புறங்களில் செயல்படும் பேருந்துகளில் பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு கட்டணமில்லா வசதி செய்து தரப்படும் என்றும் கூறினார்.பெண்களுக்கு எப்படி மற்ற பேருந்துகளில் செல்லும் போது கட்டணம் இன்றி செல்கிறார்களோ அதேபோல தற்பொழுது மினி பேருந்து வசதி ஏற்பாடு செய்யும் போது பெண்களுக்கு கட்டணமில்லா வசதியை ஏற்பாடு செய்து தரப்படும் என்று கூறினார்.