அட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
157
#image_title

அட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய்.தமிழில் 67 படங்களில் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போட்டி போடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ள விஜய்க்கு ஆரம்ப கால திரைப்பயணம் சுலபமாக அமையவில்லை. ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்விகளை சந்தித்தது.இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று அவரை கேலி செய்தவர்கள் ஏராளம்.ஆனால் தன் மகன் திரையுலகில் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்க்கு உறுதுணையாக இருந்தார்.

ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜய்யை வைத்து பல படங்களை இயக்கினார்.
தொடக்கத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும் பின்னர் தமிழ் திரையுலகில் வெற்றி நாயகனாக முத்திரை பதித்து விட்டார் விஜய்.விஜய்யின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது தாய்,தந்தை தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல் உலா வந்த வண்ணம் இருந்தன.இதற்கு காரணம் விஜய் நடிக்கும் படங்களின் கதை தேர்வு அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் விஜய்யின் விருப்பமின்றி எஸ்.ஏ.சந்திரசேகர் தலையிடுவதாக சொல்லப்பட்டது.இதன் காரணாமாக தான் விஜய் அவரது தந்தையிடம் பேசாமல் அவரை தவிர்த்து வந்தார் என்று சொல்லப்பட்டது.அம்மா ஷோபாவை மட்டும் அவ்வப்போது விஜய் சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் உடல் நலகுறைவு காரணமாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்த தகவல் தெரிந்திருந்தும் விஜய் இன்னும் அவரது அப்பாவை சந்தித்து நலம் விசாரிக்க வில்லை என்ற செய்திகள் பரவின.இந்த விவகாரம் ரசிகர்களிடையே பூதாகரமாக வெடிக்க தொடங்கியது.நெட்டிசன்கள் பலர் விஜய்யின் செயலை கண்டித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விஜய் நேற்று அப்பா எஸ்.ஏ சந்திரசேகரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.நீண்ட நாட்களுக்குப் பின்னர் விஜய் தனது அப்பா,அம்மாவை சந்தித்துள்ள நிகழ்வு அவரது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதன் மூலம் தங்களுக்குள் சண்டை என்று உலா வந்த வதந்திக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதனை தொடர்ந்து நேற்று சந்திப்பில் விஜய் அவரது அப்பா,அம்மா இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது ரசிகர்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Previous articleதனி ஒருவனாக 182 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ்!!! அபாரமாக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!!!
Next articleசுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!!