அரசு மதுபானங்களில் கிக் இல்லை.. கள்ளச்சாராயத்தில் தான் உள்ளது – திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் திமுகவை குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்று துறைமுருகன் சட்டப்பேரவையில் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் மதுவிலக்கு குறித்து சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.அதில் இனி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இதுபோல கடுமையான சட்டங்கள் அமல்படுத்தும் போதுதான் இவ்வாறான குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேற்கொண்டு இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், அரசு மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானம் சாப்ட் டிரிங்க்ஸ் போல் உள்ளது அதில் கிக் என்பதே இல்லை.இதனால் தான் பலரும் கள்ளச்சாராயத்தை தேடி குடிக்கின்றனர்.வேலை செய்துவிட்டு அசதியில் வருபவர்கள் போதை ஏற்றும் வகையில் இந்த அரசு மதுபானங்கள் இல்லாததால் கள்ளச்சாராயம் என்பது தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கள்ளச்சாராய உயிர் இழப்பிற்கு முக்கிய காரணமே திமுக தான் என அனைவரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு ஆளும் தலைமைக்கு ஏற்றதாக இல்லை. தாமாகவே முன்வந்து அரசு மதுபானங்களில் போதை இல்லை கள்ளச்சாராயத்தை குடியுங்கள் என்று போதிப்பது போலவே இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.