தமிழகத்தில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இட ஒதுக்கீடு இல்லை!! தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள இருவேறு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் தடை செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான நானூறு மருத்துவ இடங்களை நிரப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு கல்லூரிகளிலுமே நிகர்நிலை அந்தஸ்து உள்ளதால் இதில் மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை. எனவே, இந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்ற மாணவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் மொத்தம் 150 மருத்துவ இடங்கள் உள்ளது. ஆனால் சென்ற ஆண்டு நூறு இடங்களுக்கு மட்டுமே என்.எம்.சி அனுமதி அளித்திருந்தது.
எனவே, 150 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றதால் இந்த ஆண்டில் அங்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று என்.எம்.சி தனது இணையப்பக்கத்தில் கூறி உள்ளது.
அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, அகில இந்திய மருத்துவ கலந்தாய்வில் மாணவர்கள் அந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த கல்லூரியை தேர்வு செய்தவர்களுக்கு மாற்று தேர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. என்,எம்சியின் இந்த அறிவிப்பிற்கு முன்னதாகவே மாணவர்கள் சிலர் இந்த மருத்துவ இடங்களை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனால் மாணவர்கள் பக்கம் இருந்து விளக்கம் கேட்டு கடிதங்கள் அனுப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.