டி போர்டு வண்டி ஓட்ட இனி உரிமம் கட்டுப்பாடு கிடையாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

Photo of author

By Gayathri

இந்தியாவைப் பொறுத்தவரையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதனோடே டி போர்டு மட்டும் கனரக வாகனங்களுக்கென தனி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சுப்ரீம் கோர்ட்டில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கும் ஒருவர் டி போர்ட் வண்டியை இந்த உரிமம் கொண்டு இயக்கலாம் என்று அதிரடி தீர்ப்பினை வெளியிட்டு இருக்கிறது.

மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தாலும் அவர்கள் 7500 கிலோ வரை எடை கொண்ட வாகனத்தை அந்த உரிமத்தை வைத்து ஓட்ட அனுமதி இருப்பதாக சமீபத்தில் 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் மூலம் குறிப்பிட்ட விபத்தில் வாகனம் ஓட்டிய நபர் இலகு ரக வாகன உரிமம் வைத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் போக்குவரத்து வாகனம் என்பதால் அதற்கான இன்சூரன்ஸ் பணத்தை வழங்க முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும் இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் டி போர்ட் வண்டியை ஓட்டுவதற்கு நான்கு சக்கர ஓட்டுநர் உரிமமே போதுமானது என்றும், இதனை வைத்திருப்பவர்கள் 7500 கிலோ வரை எடை கொண்ட வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி இருக்கிறது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

மேலும் இது தொடர்பான தீர்ப்பை வழங்கும்போது கடந்த 2017ம் ஆண்டு முகுந்தேவகன் என்பவர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எடுத்துக்காட்டாக தெரிவித்து. அதிலும் 7500 கிலோவிற்கு குறைவான எடையில் இருந்ததால் அந்த வாகனத்தை ஓட்ட இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவருக்கு அனுமதி இருக்கிறது. எனக் கூறி இன்சூரன்ஸ் தொகையை வழங்க உத்தரவிட்டதை மேற்கோள் காட்டியும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.